தனது குரலை திருடியதாக Google மீது வழக்கு தொடுத்த பத்திரிகையாளர்
17 மாசி 2026 செவ்வாய் 11:18 | பார்வைகள் : 720
அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் பாட்காஸ்ட் தொகுப்பாளர் டேவிட் கிரீன், Google தனது குரலை அனுமதி இல்லாமல் AI பாட்காஸ்ட்களில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.
Google-ன் NotebookLM என்ற ஆராய்ச்சி கருவியில், ஆவணங்களை AI மூலம் பாட்காஸ்ட்களாக மாற்றும் வசதி 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் இரண்டு தொகுப்பாளர்கள் - ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குரல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கிரீன், அந்த ஆண் குரல் தனது குரலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
அவரது சக ஊழியர்கள் முதலில் இதை கவனித்தனர். பின்னர், ஒரு AI நிறுவனம் மேற்கொண்ட சோதனையில், NotebookLM-இல் பயன்படுத்தப்பட்ட குரல், கிரீனின் குரலுடன் 53 முதல் 60 சதவீதம் ஒற்றுமை கொண்டதாக தெரியவந்தது. 50 சதவீதத்திற்கு மேல் ஒற்றுமை உயர்ந்த அளவு (relatively high) எனக் கருதப்படுகிறது.
கிரீன், “என் தனித்துவமான குரலை, என் அனுமதி இல்லாமல் Google நகலெடுத்து, AI தயாரிப்புகளில் பயன்படுத்தியுள்ளது” என Santa Clara, California நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் Google செய்தித்தொடர்பாளர் ஜோஸ் கஸ்டானெடா, “இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. NotebookLM-இல் பயன்படுத்தப்படும் ஆண் குரல், நாங்கள் ஒப்பந்தம் செய்த தொழில்முறை நடிகரின் குரல்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்த வழக்கு, AI தொழில்நுட்பம் மனிதர்களின் தனிப்பட்ட குரல், அடையாளம் போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதில் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan