Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடி-பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

பிரதமர் மோடி-பிரான்ஸ் அதிபர் மேக்ரான்  இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

17 மாசி 2026 செவ்வாய் 04:21 | பார்வைகள் : 172


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபர் மேக்ரான் இந்தியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.மேக்ரான் மும்பை வருகையைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும் இன்று மும்பை வருகிறார். இன்று மதியம் 3.15 மணிக்கு மும்பை கவர்னர் மாளிகையில் மேக்ரான்.

பிரதமர் மோடி சந்திப்பு நடைபெறுகிறது. இதில் அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மாலை 4.30 மணிக்கு அங்குள்ள தர்பார் அரங்கில் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

பின்னர் மாலை 5.20 மணிக்கு மும்பை தாஜ்மஹால் பேலஸ் ஓட்டலில் நடைபெறும் இந்தியா-பிரான்ஸ் கூட்டமைப்பு கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இரவு 7.15 மணிக்கு மும்பை ‘கேட்வே ஆஃப் இந்தியா’வில் நடைபெறும் இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க மற்றும் கலாசார விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்கிறார்.மும்பை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மேக்ரான் நாளை (புதன்கிழமை) டெல்லி செல்கிறார். டெல்லியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் அவர், அங்கு நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

பிரான்ஸ் நாட்டிடமிருந்து 114 ரபேல் போர் விமானங்களை வாங்க சமீபத்தில் இந்திய ராணுவ அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு தலைவர்களின் சந்திப்பின் போது ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் மற்றும் அவற்றை இந்தியாவில் தயாரிக்க தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்