Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் பெண் IDF வீராங்கனைகளை துரத்திய கும்பல்

இஸ்ரேலின் பெண் IDF வீராங்கனைகளை துரத்திய கும்பல்

16 மாசி 2026 திங்கள் 15:33 | பார்வைகள் : 949


இஸ்ரேலின் பெய்னி பிராக் நகரில் பெண் IDF வீராங்கனைகளை கும்பல் ஒன்று துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் பெய்னி பிரக் நகரில் இரண்டு IDF வீராங்கனைகளை தீவிர பழமைவாத யூதக் கும்பல் துரத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோக்களில், இரண்டு IDF வீராங்கனைகளை குப்பைகள் மற்றும் கவிழ்க்கப்பட்ட குப்பை தொட்டிகள் இடையே விழுந்து தப்பி ஓடுவது பார்க்க முடிகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இரண்டு IDF வீராங்கனைகளை சுற்றி பாதுகாப்பு வளையம் ஒன்றை ஏற்படுத்தி அவர்களை பத்திரமாக மீட்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து 20 க்கும் அதிகமானோர் இஸ்ரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் IDF வீராங்கனைகளுக்கும், தீவிர பழமைவாத யூதக் கும்பலின் தாக்குதலுக்கு இடையே ஏற்பட்ட தவறுதலான புரிதலே மோதலுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பதற்கான கட்டாய ஆணையை வழங்க வந்திருப்பதாக தெரிவித்ததை அடுத்து கும்பல் தாக்குதல் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

பெண் IDF வீராங்கனைகள் துரத்தப்பட்டதற்கு இஸ்ரேலிய நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

X தளத்தில் இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், பெண் IDF வீராங்கனைகளுக்கு எதிராக நடந்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாத செயல், வன்முறையில் ஈடுபட்டது சிறிய குழுவினர் மட்டுமே, அவர்கள் ஹரேடி சமூகத்தின் முழு பிரதிநிதிகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.