Paristamil Navigation Paristamil advert login

வெற்றிக்கு பிறகு மைதானத்தில் மோதிக்கொண்ட இந்திய வீரர்கள்...!

 வெற்றிக்கு பிறகு மைதானத்தில் மோதிக்கொண்ட இந்திய வீரர்கள்...!

16 மாசி 2026 திங்கள் 15:10 | பார்வைகள் : 155


2026 T20 உலகக்கிண்ணத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டிகள் கொழும்புவில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின்னர், இந்திய வீரர்கள் மைதானத்தில் மோதிகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்டியின் கடைசி ஓவரில், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி லாங்-ஆன் திசையில் அடிக்க, அங்கிருந்த குல்தீப் யாதவ் கையில் வந்து விழுந்த பந்தை கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டதோடு, எல்லைக்கோட்டைத் தாண்டி பந்து சிக்ஸருக்கும் சென்றது.

அப்போதே ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவை நோக்கி ஏதோ ஆவேசமாக கூறினார்.

போட்டி முடிந்த பின்னர், வீரர்கள் கைகுலுக்கி கொள்ளும் போது, ஹர்திக் பாண்டியா குல்தீப் யாதவிடம் வந்து ஆக்ரோஷமாக பேசினார்.

இதனை கவனித்த சக வீரர்களான திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியாவை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

அணித்தலைவர் சூரியகுமார் யாதவும் குல்தீப் யாதவை நோக்கி ஆவேசமாக வார்த்தைகளை விட்டார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், வெற்றி பெற்ற பிறகும் ஒரு கேட்ச்சை தவற விட்டதற்காக மூத்த வீரர்கள் திட்டுவது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்