Paristamil Navigation Paristamil advert login

€200 பில்லியன் செலவில் - பிரம்மாண்டத் திட்டம்! - அமைச்சர் அறிவிப்பு!!

€200 பில்லியன் செலவில் - பிரம்மாண்டத் திட்டம்! - அமைச்சர் அறிவிப்பு!!

16 மாசி 2026 திங்கள் 07:00 | பார்வைகள் : 2152


200 பில்லியன் யூரோக்கள் செலவில் மிக பிரம்மாண்டமான திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக பொருளாதார அமைச்சர் அறிவித்தார்.

பிரான்சில் போதிய அளவில் மின்சாரம் விநியோகிக்கப்படாமல் சில பகுதிகள் உள்ள நிலையில், அப்பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் வழங்குவததே இந்த திட்டமாகும். குறிப்பாக மலைப்பகுதிகளில் வசிப்போருக்கான மின் தேவைகளை அங்கேயே உற்பத்தி செய்யவும், சில தொழிற்பேட்டை பகுதிகளில் நிலவும் மின்சார பற்றாக்குறை தீர்க்கவும் இந்த திட்டம் செயற்படுத்த உள்ளதாகவும், இதற்காக €200 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்ய உள்ளதாகவும் அமைச்சர் Roland Lescure அறிவித்தார்.

உயர் மின் அழுத்தக்கம்பிகள் (high-voltage lines - lignes à haute tension) உருவாக்கி, குறைவில்லாத மின்சாரத்தை வழங்கும் நோக்கோடு 2035 ஆம் ஆண்டை இலக்குவைத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.