Paristamil Navigation Paristamil advert login

பரிஸில் வெள்ளம்: சென்நதியில் நீர்மட்டம் உயர்வு காரணமாக சில பகுதிகளில் நுழைய தடை!!

பரிஸில் வெள்ளம்: சென்நதியில் நீர்மட்டம் உயர்வு காரணமாக சில பகுதிகளில் நுழைய தடை!!

15 மாசி 2026 ஞாயிறு 22:17 | பார்வைகள் : 2092


Seine நதி Paris நகரில் வெள்ள நிலையை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நீர்மட்டம் 3.19 மீட்டராக பதிவாகி, அடுத்த சில மணிநேரங்களில் மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 

Île-de-France பகுதியில் கடும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. Pont d’Austerlitz அளவீட்டு நிலையத்தின் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, Préfecture de police de Paris சில நதிக்கரைப் பகுதிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மூடியுள்ளது.

Vigicrues கணிப்பின்படி, செவ்வாய்க்கிழமை வரை நீர்மட்டம் 4 மீட்டர் வரை உயரக்கூடும்; இதனால் மேலும் பல துறைமுகங்கள், சாலைகள் மற்றும் கரைப்பகுதிகள் மூடப்படலாம். ஒப்பிடுகையில், 2018 வெள்ளத்தில் Seine 5.88 மீட்டர் உயரத்தையும், 2016 இல் 6 மீட்டருக்கும் மேல் உயரத்தையும் எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.