திரும்ப, திரும்ப பொய்களை பரப்புகிறீர்களே ராகுல்; அமித் ஷா
16 மாசி 2026 திங்கள் 05:56 | பார்வைகள் : 300
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் திரும்ப, திரும்ப பொய்களை பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
குஜராத்தின் காந்தி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் அமித் ஷா பேசியதாவது;
ராகுல் நீங்கள் பொய்களைப் பரப்புகிறீர்கள். இந்த வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்வதன் மூலம் பிரதமர் மோடி நமது பால் துறையை அழித்துவிட்டதாக ராகுல் கூறினார்.
பால் உற்பத்திக்கு வழி வகுப்பவர்கள் தான் நாங்கள். அனைத்து வர்த்த ஒப்பந்தங்களிலும் பால்துறைக்கு முழு பாதுகாப்பு தரும் பணியை பிரதமர் மோடி செய்துள்ளார். அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மூலம், நமது விவசாயிகளின் விளைபொருட்கள், மீனவர்களின் பொருட்கள் உலகம் முழுவதும் உள்ள சந்தைகளில் சென்று சேருவதற்கான வழி திறக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள், கால்நடைகளை வளர்ப்போரின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது என்ற பிரதமரின் உறுதியை இங்கே உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்வதன் மூலம் பிரதமர் மோடி நமது பால் துறையை அழித்து விட்டதாக ராகுல், நீங்கள் பொய்களை பரப்புகிறீர்கள். அவர் கூறுவது சாத்தியமற்றது.
உங்களுக்கு (ராகுல்) விடை கொடுத்த இந்திய மக்களை கடவுள் ஏற்கனவே ஆசிர்வதித்துவிட்டார். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். இந்த உலகிற்கு,. நம் நாட்டின் முழு விவசாய சந்தையையும் நீங்கள் திறந்துவிட்டீர்கள். பிரதமர் மோடி வந்தார், அத்தகைய சூழலை மாற்ற உறுதியுடன் செயல்பட்டார். ஒப்பந்தத்தை மாற்றினார். இன்றும் கூட விவசாயிகளை பாதுகாக்க அவர்(பிரதமர் மோடி) ஒரு கவசம் போன்று செயல்படுகிறார். இவ்வாறு அமித் ஷா பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan