காதலர் தின கொண்டாட்டம்: அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட வைரல் பதிவு
15 மாசி 2026 ஞாயிறு 11:09 | பார்வைகள் : 1387
காதலர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பான தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை காதலர் தின பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 2 ஆண்டு கால வெற்றிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனங்கள் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பதிவு “உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது” (Made Just for you) என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்ட சிறப்பு அட்டையில், வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிரிந்து “என்னுடைய இதயத்தை கவர்ந்தாய்” என்ற கிண்டலான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.
மேலும் நம்முடைய உறவை வரையறுக்க வேண்டிய நேரம் இது வென்று குறிப்பிட்டு இதய வடிவத்திற்குள் கிரீன்லாந்து வரைபடம் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மர்கரிடா விமர்சனம் தொடர்பான விவரங்களும், டிரம்ப் Executive Order 4547 ஆவணத்தை கையில் வைத்து இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan