பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உடல்நிலை தொடர்பில் மருத்துவ பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு
15 மாசி 2026 ஞாயிறு 08:42 | பார்வைகள் : 383
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் Adiala Jail சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரத்த உறைவு காரணமாக அவரது வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே உள்ளதாகவும், சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் 85 சதவீத பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் உயர் நீதி மன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து, இம்ரான் கானின் உடல்நிலையை மதிப்பீடு செய்ய மருத்துவக் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி, அடுத்த இரண்டு மாதங்களில் இஸ்லாமாபாத் நகரில் கட்டப்பட்டு வரும் புதிய சிறைச்சாலை முடிவடைந்ததும், இம்ரான் கான் அங்கு மாற்றப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
புதிய சிறையில் மேம்பட்ட மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை அளிக்காததை கண்டித்து அவரது கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் நாடாளுமன்றம் அருகே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இம்ரான் கான் அல்-ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும், அவரது உடல்நிலையில் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan