ஜெகன் மோகன் ரெட்டி யோசனையால் பேச்சை மாற்றிய விஜய் !
15 மாசி 2026 ஞாயிறு 09:32 | பார்வைகள் : 388
த.வெ.க. தலைவர் விஜய், தனது அரசியல் எதிரி தி.மு.க., கொள்கை எதிரி பா.ஜ.க. என்று மேடைக்கு மேடை பேசி வந்தார். மாநிலத்தை ஆளும் தி.மு.க.வையும், மத்தியை ஆளும் பா.ஜ.க.வையும் அவர் விமர்சிக்காமல் இருந்ததே இல்லை. இடையில் எதிர்கட்சியான அ.தி.மு.க.வையும் கூடுதலாக விமர்சிக்கத் தொடங்கினார். ஆனால், சட்டசபை தேர்தல் நெருங்க.. நெருங்க.. அவரது நிலைப்பாட்டில் மாற்றம் தெரியத் தொடங்குகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கேள்வி மேல் கேள்விகடந்த 13-ந் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த தவெக பிரசார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், நான் ஒரு கட்சியை மட்டும் எதிர்ப்பதாகவும், மற்றொரு கட்சியை எதிர்ப்பது இல்லை என்று கூறுகிறார்கள். இது சட்டசபை தேர்தல். யார் மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறார்கள். யாரை அகற்ற வேண்டும். மக்களால் பல முறை 'டெலிட் ' செய்யப்பட்டவர்களை பற்றி ஏன் பேச வேண்டும். இருட்டில் ஏன் கல் எறிய வேண்டும் என்று பேசினார்.
அதாவது, தி.மு.க.வைத்தான் விமர்சிக்க வேண்டும். பா.ஜ.க.வை ஏன் விமர்சிக்க வேண்டும் என்பது போல், கட்சியின் பெயர்களை குறிப்பிடாமல் பேசினார். விஜய்யின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று அரசியல் களத்தில் கேள்வி மேல் கேள்வி எழுந்தது..ஏற்கனவே, தனது கடைசிப்படமான 'ஜனநாயகன்' வெளிவராமல் சிக்கித்தவிப்பது, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது தொடர்பாக நடைபெற்று வரும் கிடுக்கிப்பிடி சி.பி.ஐ. விசாரணை என தொடர் சங்கடங்களில் விஜய் சிக்கித் தவித்து வரும் நிலையில், த.வெ.க. கூட்டணியில் கைகோர்க்க வந்த காங்கிரஸ் கட்சியையும் சேரவிடாமல் தடுத்தது என பல்வேறு நடவடிக்கைகளில் மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க. ஈடுபட்டதாக த.வெ.க. தலைமை புலம்பி வருகிறது.
அரசியல் ஆலோசனைஇந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சகோதரர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி வருகை தந்திருந்தார். அழைப்பின் பேரில் இந்த நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் விஜய்யும் கலந்துகொண்டார். .ஏற்கனவே, அரசியலில் நடிகர் விஜய்யின் 'ரோல் மாடல்' ஜெகன்மோகன் ரெட்டிதான் என்று கூறப்பட்டு வருகிறது.
அதனால்தான், அவரைப்போலவே காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிகிறார் என்றும் சொல்லப்படுகிறது. திருமண விழாவில் ஜெகன் மோகன் ரெட்டியை விஜய் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, சில அரசியல் ஆலோசனைகளை ஜெகன் மோகன் ரெட்டியிடம் விஜய் கேட்டாராம். .பா.ஜ.க.வை சீண்ட வேண்டாம்அதற்கு ஜெகன் மோகன் ரெட்டி, நீங்கள் தேவையில்லாமல் பா.ஜ.க.வை சீண்ட வேண்டாம். த.வெ.க. ஒரு மாநில கட்சி. தற்போது சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, எதிர்ப்பு என்பது ஆளுங்கட்சியான தி.மு.க. மீது மட்டுமே இருக்கட்டும். தற்போதைய பிரச்சினைகளுக்கு பா.ஜ.க.வை சீண்டியதே காரணம் என்று கூறினாராம். அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொண்ட விஜய்யும், தமிழக எல்லையில் உள்ள ஆந்திர ரெட்டி சமூக மக்களை த.வெ.க.வுக்கு வாக்களிக்க சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம். ஜெகன் மோகன் ரெட்டியும் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாராம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan