Paristamil Navigation Paristamil advert login

அவதானம்! - இரு வாரங்களுக்கு மெற்றோ சேவைகள் தடைப்படுகிறது!!

அவதானம்! - இரு வாரங்களுக்கு மெற்றோ சேவைகள் தடைப்படுகிறது!!

15 மாசி 2026 ஞாயிறு 07:16 | பார்வைகள் : 1169


மிக குறுகிய தூரத்துக்கு பயணிக்கும் மெற்றோ என சொல்லப்படும் 7bis வழி மெற்றோக்கள் அடுத்துவரும் இரு வாரங்களுக்கு தடைப்பட உள்ளன.

பெப்ரவரி 21 சனிக்கிழமை முதல் மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை வரையான இரு வாரங்களுக்கு இந்த சேவைத்தடை ஏற்பட உள்ளதாக RATP அறிவித்துள்ளது. இந்த வழிச் சேவையில் உள்ள தண்டவாளங்கள் மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Louis Blanc, Jaurès, Bolivar, Buttes Chaumont, Botzaris, Place des Fêtes, Pré-Saint-Gervais மற்றும் Danube ஆகிய நிலையங்களை இணைக்கும் இந்த சேவைக்கு பதிலாக, இந்த இருவாரங்களும் பேருந்துகள் சேவையில் இணைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த 7bis மெற்றோவானது 3.1 கிலோமீற்றர் தூரத்தை இணைக்கிறமை குறிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்