கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி! - நால்வர் காயம்
14 மாசி 2026 சனி 17:02 | பார்வைகள் : 1811
கொழும்பு, ஜிந்துபிட்டி வரகஹா சந்தி பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உந்துருளியில் வந்த சந்தேகநபர்கள் டி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan