பிரான்சில் வசிக்கும் மொராக்கோ செயற்பாட்டாளர், சமூக வலைதள பதிவுகள் காரணமாக மொராக்கோவில் கைது!!
14 மாசி 2026 சனி 15:07 | பார்வைகள் : 3404
பிரான்சில் வசித்து வேலை செய்து வரும் 28 வயதான மொராக்கோ செயற்பாட்டாளர் ஸினெப் கர்ரூபி (Zineb Kharroubi), தனது குடும்பத்தைச் சந்திக்க மராக்கெஷ் (Marrakech) திரும்பியபோது விமானத்தில் இருந்து இறங்கியவுடன் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள் “இணையத்தில் குற்றச்செயல்களுக்கு தூண்டுதல்” எனக் கூறி, அவர் மீது மொராக்கோ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்; பிப்ரவரி 26 அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
கலாச்சாரத் துறையில் பணிபுரியும் அவர், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் சீர்திருத்தங்களை கோரி அமைதியான போராட்டங்களை நடத்திய Génération Z 212 இளைஞர் இயக்கத்தை ஆதரித்ததாக கூறப்படுகிறது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மொராக்கோவில் ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, செயற்பாட்டாளர்கள் மீது கடுமையான கண்காணிப்பு மற்றும் அடக்குமுறை நடைபெறுகிறது என குற்றம் சாட்டுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan