9 பந்தில் 35 ரன் குவித்து உலகக்கிண்ணத்தில் வரலாற்று சாதனை செய்த அணி
14 மாசி 2026 சனி 11:51 | பார்வைகள் : 1659
ஓமன் அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் அயர்லாந்து அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
கொழும்பில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது அணித்தலைவர் லோர்கன் டக்கர் அதிரடியில் இறங்க, கரெத் டெலனியும் அவருடன் கைகோர்த்தார். இருவரும் ஓமன் பந்துவீச்சை அடித்து நொறுக்க, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
அரைசதம் விளாசிய கரெத் டெலனி (Gareth Delany) 30 பந்துகளில் 56 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஜார்ஜ் டாக்ரெல் (George Dockrell) சிக்ஸர் மழை பொழிய, அயர்லாந்து அணி 235 ஓட்டங்கள் குவித்தது.
நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். லோர்கன் டக்கர் (Lorcan Tucker) 51 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்களும், டக்ரெல் 9 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 35 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர்.
ஷகீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஆடிய ஓமன் அணி 18 ஓவர்களில் 139 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆக, அயர்லாந்து அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan