Arc de Triomphe அருகே கத்தி தாக்குதல்: சந்தேக நபர் மீது துப்பாக்கிச்சூடு!!
13 மாசி 2026 வெள்ளி 21:59 | பார்வைகள் : 2146
பரிஸில் உள்ள Arc de Triomphe அருகே இன்று மாலை 6 மணியளவில் கத்தி ஏந்திய ஒருவர் ஜொண்டாமினரை தாக்க முயன்ற சம்பவம் நடைபெற்றது. அணையாவிளக்கை மீள ஏற்றும் விழா நடைபெற்று கொண்டிருந்த வேளையில், மூன்று ஜொண்டாமினர் வீரர்கள் அங்கு பணியில் இருந்துள்ளனர்.
காரணம் தெளிவாக தெரியாத நிலையில், ஒருவரை கத்தியால் தாக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு இருந்த மற்றொரு ஜொண்டாமினர் துப்பாக்கி பயன்படுத்தி அந்த நபரை கட்டுப்படுத்தியுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Parquet national antiterroriste விசாரணையை மேற்கொண்டுள்ளது. RATP பாதுகாப்பு காரணங்களால், மெட்ரோ 1, 6 மற்றும் RER A-இல் உள்ள Charles-de-Gaulle-Étoile நிலையம், தற்காலிகமாக சேவையில் இல்லை என்று அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan