Paristamil Navigation Paristamil advert login

பனிப்பொழிவு! - சீரற்ற வானிலை தொடர்கிறது!!

பனிப்பொழிவு! - சீரற்ற வானிலை தொடர்கிறது!!

13 மாசி 2026 வெள்ளி 17:19 | பார்வைகள் : 581


‘நில்ஸ்’ புயல் மேற்கில் இருந்து கிழக்காக கடந்த நிலையில், இவ்வார இறுதியில் இல்-து-பிரான்சுக்குள் பனிப்பொழிவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மாகாணம் முழுவதிலும், தலைநகர் பரிசிலும் இந்த பனிப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை பெப்ரவரி 14 மற்றும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி ஆகிய நாட்களில் மூன்று செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, நாளை சனிக்கிழமை மழை மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக 59 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ain, Allier, Ardèche, Ardennes, Ariège, Aube, Bouches-du-Rhône, Calvados , Cantal, Cher, Côte-d'Or, Côtes d'Armor, Creuse, Doubs, Drôme, Eure-et-Loir, Finistère, Gard, Hérault, Indre, Isère, Jura, Landes, Loir-et-Cher, Loire, Loiret, Lozère, Maine-et-Loire, Manche, Haute-Marne, Mayenne, Meurthe-et-Moselle, Meuse. 

ஆகிய மாவட்டங்களோடு,

Moselle, Nord, Oise, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Bas-Rhin, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Sarthe, Haute-Savoie, Paris, Seine-Maritime, Yvelines, Vaucluse, Vendée, Vienne, Haute-Vienne, Vosges, Yonne, Hauts-de-Seine, Seine-St-Denis, Val-de-Marne மற்றும் Val-D'Oise ஆகிய 59 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்