Paristamil Navigation Paristamil advert login

முட்டை பற்றாக்குறை: சூப்பர் மார்க்கெட்டுகளில் காலியாகும் நிலை??

முட்டை பற்றாக்குறை: சூப்பர் மார்க்கெட்டுகளில் காலியாகும் நிலை??

12 தை 2026 திங்கள் 12:31 | பார்வைகள் : 738


சூப்பர் மார்க்கெட்டுகளில் கடந்த சில மாதங்களாக முட்டை பற்றாக்குறை தொடர்கிறது. மோசமான வானிலை, பனி மற்றும் புயல்கள் காரணமாக விநியோகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

அதே நேரத்தில், முட்டை ஒரு மலிவான மற்றும் ஆரோக்கியமான புரதசத்து நிறைந்த உணவாக இருப்பதால் அதன் நுகர்வு பெரிதும் அதிகரித்துள்ளது. பிரான்சில் ஒருவர் ஆண்டுக்கு சராசரியாக 220-க்கும் மேற்பட்ட முட்டைகளை உண்ணுகிறார், இதனால் ஆண்டுக்கு கூடுதலாக 300 மில்லியன் முட்டைகள் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தி இந்த அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது.

தேவையை சமாளிக்க உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தாலும், புதிய வளர்ப்பாளர்கள் முழு உற்பத்தியை  மேற்கொள்ள நேரம் தேவைப்படுகிறது. மேலும், பெரும்பாலான கோழிகள் கூண்டுகளில் அல்லாமல் வெளிப்புற சூழலில் வளர்க்கப்பட வேண்டும் என்ற சட்ட மாற்றமும் இந்த துறையை மெதுவாக்கியுள்ளது. 

ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இதே போன்ற பற்றாக்குறை இருப்பதால் இறக்குமதியும் குறைந்துள்ளது. இருப்பினும், நீண்டகால ஒப்பந்தங்கள் காரணமாக முட்டை விலைகள் பெரிய அளவில் உயரவில்லை.

"நாங்கள் போதுமான அளவு உற்பத்தி செய்யவில்லை," என்று இன்று காலை BFMTV-RMC இல் விருந்தினராக கலந்து கொண்ட விவசாய அமைச்சர் அன்னி ஜெனீவர்ட் விளக்கி உள்ளார் . மேலும் கால்நடை கட்டிடங்கள் கட்டுவதற்குத் தடையாக இருக்கும் சில  சட்ட தடைகளை நீக்க கோரிக்கை விடுத்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்