Paristamil Navigation Paristamil advert login

புதிய கருத்துக்கணிப்பு: அரசியலில் RN கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பு!!

புதிய கருத்துக்கணிப்பு:  அரசியலில் RN கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பு!!

12 தை 2026 திங்கள் 08:00 | பார்வைகள் : 1143


புதிய கருத்துக்கணிப்பின் படி, Rassemblement National (RN) கட்சியின் கருத்துக்களுக்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Verian நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், 42% பிரெஞ்சு மக்கள் இந்த தீவிர வலதுசாரி கட்சியின் கருத்துகளுடன் உடன்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 3 புள்ளிகள் அதிகமாகவும், 2022 முதல் 13 புள்ளிகள் உயர்வாகவும் உள்ளது. 

அதே நேரத்தில், 41% பேர் RN ஜனநாயகத்திற்கு ஆபத்தாக இருக்கிறது எனக் கருதுகின்றனர், மேலும் 44% பேர் கட்சி வெளிநாட்டினரை வெறுக்கும் கட்சியாக நினைக்கின்றனர். இருப்பினும், பெரும்பாலானோர் இந்தக் கட்சி அதிகாரத்தை அடையக்கூடும் என நம்புகின்றனர். அதே கருத்துக்கணிப்பில், RN தலைவர் ஜோர்டன் பார்டெல்லா அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் அதிக வாய்ப்புடையவர் என 49% மக்கள் கருதுகின்றனர். 

ஜனநாயகத்திற்கு ஆபத்தான அரசியல் தலைவர்களாக ஜோன்-லூக் மெலன்சான், எரிக் செம்மூர் மற்றும் எம்மானுவேல் மக்ரோன் போன்றவர்களை குறிப்பிடப்பட்டுள்ளனர். மரின் லூ பென் தொடர்பான நீதிமன்ற வழக்கில், அவர் ஒரு சாதாரண நீதிமன்ற வழக்காளரைப் போலவே நடத்தப்படுகிறார் என பாதிக்கும் மேற்பட்ட பிரெஞ்சு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்