Paristamil Navigation Paristamil advert login

அபாயகரமான வெளிநாட்டவர்களை வெளியேற்ற வேண்டும்!

அபாயகரமான வெளிநாட்டவர்களை வெளியேற்ற வேண்டும்!

12 தை 2026 திங்கள் 06:40 | பார்வைகள் : 639


குடியரசுக்கான உரிமைகள் ஒன்றிய கட்சியான Union des droites pour la République (UDR)  தலைவர் மற்றும் நீஸ் நகர்மன்ற வேட்பாளர் எரிக் சியோட்டி Eric Ciotti,) பிரான்ஸ் அரசியலமைப்பில் 'பாதுகாப்பு உரிமை' யைச் சேர்க்கும் நோக்கில் விரைவில் ஒரு அரசியலமைப்பு சட்ட முன்மொழிவு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

பாதுகாப்பை அடிப்படை உரிமையாக மாற்றும் முயற்சி

எரிக் சியோட்டி கூறியதாவது :
- ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பு ஒரு அடிப்படை மற்றும் உயர்ந்த உரிமை
- இது அரசியலமைப்பில் தெளிவாக எழுதப்படல் வேண்டும்
- இந்த மாற்றம் ஒருநாள் 'பொதுவெக்கெடுப்பு' மூலம் மக்களிடம் நேரடியாக வாக்கெடுப்புக்கு வர வேண்டும்

அபாயகரமான வெளிநாட்டவர்களை எளிதில் வெளியேற்ற வேண்டும்

- 'பாதுகாப்பு எல்லாவற்றுக்கும் மேலானது'
- நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதப்படும் வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது அரசின் கடமை
- இந்த நீக்கம் அரசியலமைப்பு கொள்கையாக மாற்றப்படல் வேண்டும்
- வெளியேற்று நடவடிக்கை முடியும் வரை அந்த நபர் காவலில் வைக்கப்பட வேண்டும்

அரசின் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டுமெனும் கோரிக்கை
கடந்த வாரங்களில் எரிக் சியொட்டி:
- பாதுகாப்பு படைகளுக்கு அதிக நிதி
- போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள்
- 'எதையும் பொருட்படுத்தாத பாதுகாப்பு கொள்கை'

என்பனவற்றை வலியுறுத்தி வந்துள்ளார்.

அவர் மேலும் அதிக விசாரணை அதிகாரிகள், அதிக நிதி, போதைப்பொருள் நுகர்வோருக்கு எதிரான கடுமையான நடவடிக்கை தேவை என கூறியுள்ளார்
 

வர்த்தக‌ விளம்பரங்கள்