Paristamil Navigation Paristamil advert login

SNCF வேலைநிறுத்தம்: Île-de-France பகுதியில் போக்குவரத்து இடையூறுகள்!!

SNCF வேலைநிறுத்தம்: Île-de-France பகுதியில் போக்குவரத்து இடையூறுகள்!!

11 தை 2026 ஞாயிறு 21:37 | பார்வைகள் : 731


ஜனவரி 13 செவ்வாய்க்கிழமை CGT Cheminots மற்றும் Sud-Rail தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலைநிறுத்தத்தையொட்டி, SNCF ரயில் சேவைகள் பெரும்பாலும் இயல்பாக இருக்கும். 

TGV மற்றும் Intercités ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்; TER ரயில்களிலின் சேவை பெரும்பாலும் சாதாரணமாக இருக்கும். Occitanie மற்றும் Île-de-France பகுதிகளில் மட்டும் சில வரையறுக்கப்பட்ட இடையூறுகள் ஏற்படலாம்.

தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வுகளை கோருகின்றன, அதே நேரத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய பேச்சுவார்த்தை (NAO) முடிவுகளை நிர்வாகம் இதே நாளில் அறிவிக்கவுள்ளது. நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஊழியர்களின் சம்பளம் சராசரியாக 16.4% உயர்ந்துள்ளதாகவும், பெரும்பாலான ஊழியர்கள் குறிப்பிடத்தக்க உயர்வுகளை பெற்றுள்ளதாகவும் கூறுகிறது. 

2026ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வு குறைந்தபட்சம் 2025 ஆம் ஆண்டின் பணவீக்க அளவான 1.1 சதவீதத்திற்கு சமமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்