Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க.வுடனான அன்புமணி கூட்டணி சட்டவிரோதமானது - ராமதாஸ்

அ.தி.மு.க.வுடனான அன்புமணி கூட்டணி சட்டவிரோதமானது - ராமதாஸ்

12 தை 2026 திங்கள் 05:54 | பார்வைகள் : 137


பா.ம.க. பெயரைப் பயன்படுத்தி அன்புமணி, அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது சட்டவிரோதம் என்றும், கூட்டணி குறித்து பேச தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தலைமை தேர்தல் ஆணையருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.  

இதுதொடர்பாக அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-  

பா.ம.க. பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் அன்புமணி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ம.க. தலைவர் என அன்புமணி உரிமை கோர முடியாது. தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு உரிமைக்கு இல்லை. எனக்கு மட்டுமே உரிமை உள்ளது.  

அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தியது சட்டவிரோதமானது. அவரது செயல்பாடு பா.ம.க.வின் அமைப்பு சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மோசடி செயல்களில் ஈடுபட்டு தலைவர் பதவி காலத்தை அன்புமணி நீட்டித்துக் கொண்டார்.  

அன்புமணி கட்சித் தலைவராக இருந்த போது தேர்தலில் தோல்வி அடைந்ததால் பா.ம.க. அங்கீகாரத்தை இழந்தது. அன்புமணி தனது தலைவர் பதவியை நீட்டிக்க மோசடி செய்துள்ளார். அன்புமணியை பா.ம.க. தலைவராக நீட்டித்ததற்கு எதிரான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நான் பா.ம.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அனுமதியின்றி பா.ம.க. பெயரை அன்புமணி பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்ய வேண்டும்.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்