பரிஸ் மாநகராட்சி தேர்தல் - ஏன் ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு முறை வாக்களிக்க வேண்டும்?
11 தை 2026 ஞாயிறு 13:12 | பார்வைகள் : 778
2026 மார்ச் 15 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெறும் பாரிஸ் நகராட்சி தேர்தல்களில், ஒவ்வொரு வாக்காளரும் ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு முறை வாக்களிக்க வேண்டும். இது 2025 ஆகஸ்ட் 11 அன்று Paris–Lyon–Marseille (PLM) சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றத்தின் விளைவு ஆகும்.
புதிய முறை : இரண்டு வாக்குகள்
பரிஸ் வாக்காளர்கள் இரண்டு தனித்தனி பெட்டிகளில் இரண்டு வாக்குச் சீட்டுகளை இட வேண்டும் :
1. மாவட்ட சபைக்கான(conseil d’arrondissement) வேட்பாளர் பட்டியல்
2. பரிஸ் பெருநகரசபைக்கான (Conseil de Paris) வேட்பாளர் பட்டியல், இது ர்ôவநட னந ஏடைடந-க்கு போட்டியிடும் தலைவரால் நடத்தப்படும்
பின்னர், Conseil de Paris உறுப்பினர்கள் தலைநகரின் மாநகரத் தலைவரை (Maire de paris) தேர்ந்தெடுப்பார்கள்.
முன்னைய முறை எப்படி இருந்தது?
முன்பு, வாக்காளர்கள் மாவட்ட சபையினரை மட்டும் தேர்ந்தெடுத்தனர்.
அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பின்னர் பரிஸ் மாநகர சபைத் தலைவரைத் தேர்ந்தெடுத்தனர்.
புதிய முறையில், வெற்றி பெற்ற பட்டியலுக்கான மேலதிக இருக்கைகள் 50% இலிருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.
அரசியல் எதிர்வினைகள்
• சில கட்சிகள் இந்த மாற்றத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஒன்றாக வரவேற்கின்றன.
• எதிர்ப்பாளர்கள், இந்த முறை முழுமையான பெரும்பான்மையைப் பெற கடினமாக்கும் எனக் கவலைப்படுகின்றனர்.
வாக்களிக்கும் நடைமுறை
ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு முறை வாக்கு நடைமுறையை பின்பற்ற வேண்டும் :
• வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
• இரண்டு உறைகள் பெறுதல்
• வாக்குச் சீட்டுகள் எடுப்பது
• தனியறையில் சென்று தேர்வு செய்தல்
• இரண்டு பெட்டிகளிலும் வாக்கு செலுத்துதல்
யார் வாக்களிக்கலாம்?
2026 நகராட்சி தேர்தலில் வாக்களிக்க :
• பிரெஞ்சு குடியுரிமை
• 18 வயது நிறைவு
• தேர்தல் பட்டியலில் பெயர் பதிவு — இது கட்டாயமானது.
பதிவு செய்யாதவர்கள் :
• இணையத்தில் 4 பிப்ரவரி வரை செய்ய முடியும்
• அல்லது நகரசபை நிர்வாக அலுவலகத்தில் 6 பிப்ரவரி வரை செய்ய முடியும்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan