Paristamil Navigation Paristamil advert login

மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடியும்: இஷா சிங் அறிவுரை

மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடியும்: இஷா சிங் அறிவுரை

11 தை 2026 ஞாயிறு 08:31 | பார்வைகள் : 146


புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்த விஜய் கலந்துகொண்ட த.வெ.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரியான சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், தனி ஆளாக நின்று கூட்டத்தை கட்டுப்படுத்தினார். இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.  

இந்தநிலையில் இஷா சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பலரும் சமூக வலைதளத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு பிரியாவிடை கொடுத்தனர். இருப்பினும் இன்னும் அவர் டெல்லிக்கு பணிமாறுதலாக செல்லவில்லை.  

இதற்கிடையே கம்பன் கலையரங்கத்தில் நடந்த போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங் பங்கேற்றனர். அப்போது அவரிடம், பதவி உயர்வு பெற்ற போலீசார் வாழ்த்து பெற்றனர். அவர்களிடம், மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்று அறிவுரை கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்