சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி குழுவின் மீது இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்
11 தை 2026 ஞாயிறு 10:59 | பார்வைகள் : 348
சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதி குழு இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதனை அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) தெரிவித்துள்ளது.
சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பல்மைரா நகரில் கடந்த மாதம் நடந்த தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் 2 பேர் மற்றும் அமெரிக்க குடிமகன் ஒருவர் என 3 பேர் உயிரிழந்தார்கள்.
இந்நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி குழு இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
அமெரிக்க வீரர்களான எட்கர் பிரையன் டோரஸ்-தோவர், வில்லியம் நதானியேல் ஹோவர்ட் மற்றும் அயாத் மன்சூர் சகாத் என 3 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில்,
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை குறி வைத்து கூட்டணி படைகளுடன் சேர்ந்து பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. எங்களுடைய போர் வீரர்களுக்கு துன்பம் ஏற்படுத்தினால், உலகின் எந்த மூலையில் நீங்கள் பதுங்கினாலும், உங்களை கண்டறிந்து கொல்வோம் என்பதே எங்களுடைய வலிமையான செய்தி என தெரிவித்து உள்ளது.
அதற்கு முன்தினம் ஐ.எஸ். இயக்கத்தின் இராணுவ தலைவரை கைது செய்து விட்டோம் என சிரிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan