Paristamil Navigation Paristamil advert login

பயிர் கழிவில் இருந்து பிளாஸ்டிக் - ஜேர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 பயிர் கழிவில் இருந்து பிளாஸ்டிக் - ஜேர்மன் விஞ்ஞானிகள்  கண்டுபிடிப்பு

11 தை 2026 ஞாயிறு 08:59 | பார்வைகள் : 117


ஜேர்மனியின் Oldenburg பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள், பயிர் கழிவுகள், புல், பாசி போன்ற இயற்கை கழிவுகளை பயன்படுத்தி மருத்துவம், வாகன உற்பத்தி, பேக்கேஜிங் போன்ற துறைகளில் பயன்படும் முழுமையாக கரையக்கூடிய பிளாஸ்டிக் உருவாக்கி வருகின்றனர்.
இந்த திட்டம் EcoPBS என அழைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் தயாரிக்க Polybutylene Succinate (PBS) என்ற பொருள் பயன்படுத்தப்படுகிறது. 
PBS என்பது சாதாரண பிளாஸ்டிக் போலவே வலிமையானது, ஆனால் சுற்றுச்சூழலில் கரையக்கூடியது என்பதே அதன் சிறப்பு. 
ஜேர்மன் அரசு, இந்த திட்டத்திற்கு 2.7 மில்லியன் யூரோ நிதி உதவி வழங்கியுள்ளது. 
விஞ்ஞானிகள், நுண்ணுயிரிகள் மூலம் நொதித்தல் (fermentation) முறையை பயன்படுத்தி கழிவுகளை பிளாஸ்டிக்காக மாற்றுகின்றனர்.
இதில் ABE fermentation மற்றும் succinic acid fermentation என இரண்டு வகையான நொதித்தல் முறைகள் பரிசோதிக்கப்படுகின்றன.
குறைந்த செலவில், குறைந்த எரிசக்தியில் அதிக உற்பத்தி பெறுவது விஞ்ஞானிகளின் நோக்கம். 
இந்த முயற்சி வெற்றியடைந்தால், பிளாஸ்டிக் மாசுபாடு குறையும். மருத்துவம், வாகன உற்பத்தி, பேக்கேஜிங் போன்ற துறைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று கிடைக்கும். 
உற்பத்தி செயல்முறையில் உருவாகும் கழிவுகளை கூட மின்சாரம் மற்றும் வெப்பம் உற்பத்திக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்