Paristamil Navigation Paristamil advert login

98-வது ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதி பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’

98-வது ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதி பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’

10 தை 2026 சனி 15:23 | பார்வைகள் : 431


98-வது ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதி பட்டியலில் இந்திய திரைப்படங்கள் பெரும் சாதனையை படைத்துள்ளன. உலகப்புகழ்பெற்ற ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில், இந்தியாவிலிருந்து ‘டூரிஸ்ட் பேமிலி’ உள்ளிட்ட முக்கிய திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளன. 

ரிஷப் ஷெட்டியின் பிரம்மாண்ட படைப்பான 'Kantara', அனிமேஷன் ஜாம்பவான் ஈ. நிவாஸின் 'Mahaavatar Narasimha', அனுபம் கெரின் 'Tanvi The Great' மற்றும் வான்யா தேஷ்முக் இயக்கத்தில் உருவான 'Sister Midnight' ஆகிய படங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளன.

இந்த தகுதிப் பட்டியல் என்பது ஆஸ்கார் விருதின் இறுதிப்பரிந்துரைக்கு முந்தைய ஒரு முக்கியமான கட்டமாகும். சிறந்த திரைப்படம் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் இந்த படங்கள் சர்வதேசத் திரைப்படைப்புகளுடன் போட்டியிடவுள்ளன. 

குறிப்பாக 'காந்தாரா' அதன் கலாச்சார தாக்கத்திற்காகவும், ‘டூரிஸ்ட் பேமிலி’ அதன் எதார்த்தமான கதையமைப்பிற்காகவும் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆஸ்கார் விழாவில், இந்திய படங்கள் ஆஸ்கார் விருதை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்