Paristamil Navigation Paristamil advert login

டிரம்பின் பிறந்தநாளை முன்னிட்டு G7 மாநாட்டை ஒத்திவைத்த மக்ரோன்!!

டிரம்பின் பிறந்தநாளை முன்னிட்டு G7 மாநாட்டை ஒத்திவைத்த மக்ரோன்!!

10 தை 2026 சனி 14:05 | பார்வைகள் : 1326


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜூன் 14 அன்று தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் கலப்பு தற்காப்புக் கலை (MMA) போட்டி ஒன்றை நடத்தவுள்ளார். இதன் காரணமாக, பிரான்ஸ் ஏற்பாடு செய்யும் எவியான் நகரில் நடைபெறவிருந்த G7 உச்சி மாநாட்டின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. 

ஆரம்பத்தில் ஜூன் 14 முதல் 16 வரை நடைபெறவிருந்த மாநாடு, தற்போது ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறும்.

ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி, உலகின் சுதந்திர நாடுகளின் தலைவராக டிரம்பின் பங்கேற்பு அவசியம் என்பதால், அவரது அட்டவணையை கருத்தில் கொண்டு தேதிகள் மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து எலிசே மாளிகை, அனைத்து G7 கூட்டாளிகளுடனான ஆலோசனைகளின் அடிப்படையில் தான் தேதி நிர்ணயிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது. G7 குழுவில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் அடங்கும்.

ஒவ்வொரு ஆண்டும், அமைச்சரவை கூட்டங்களையும், அரசுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டையும் ஒவ்வொரு நாடும் மாறி மாறி ஏற்பாடு செய்கிறது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததன் பிறகு, இந்த அமைப்பு பெரிதும் மாற்றமடைந்துள்ளது; அவர் அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டுறவுகளை ஆழமாகக் குலைத்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்