Paristamil Navigation Paristamil advert login

ஈரான் ஒருபோதும் பின்வாங்காது - ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி

ஈரான் ஒருபோதும் பின்வாங்காது - ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி

9 தை 2026 வெள்ளி 18:34 | பார்வைகள் : 576


ஈரான் எந்தவித அழுத்தங்களுக்கும் ஒருபோதும் பின்வாங்காது என ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நோக்கி வெளியிட்ட கடும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

“ஈரான் ஒரு சுயாதீன நாடு. எங்களின் இறையாண்மையும், தேசிய மரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்படும் எந்த முயற்சிக்கும் நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஈரான் பின்வாங்கும் நாடல்ல,” என அயத்துல்லாஹ் கொமெய்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சினைகளை முதலில் கவனிக்க வேண்டிய நிலையில் டொனால்ட் டிரம்ப் பிற நாடுகளுக்கு அறிவுரை வழங்குவதாகவும், “டிரம்ப் தனது சொந்த நாட்டை எவ்வாறு நடத்துவது என்பதிலேயே கவனம் செலுத்துவது நல்லது” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

அண்மைக்காலமாக அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துகள் மத்திய கிழக்கு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பதிலளித்துள்ள ஈரான், தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களை பாதுகாப்பதில் எந்த சமரசத்திற்கும் இடமளிக்காது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், வெளிநாட்டு அழுத்தங்கள், பொருளாதார தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஈரானின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்த முடியாது என்றும், மக்கள் ஆதரவுடன் ஈரான் தனது பாதையில் முன்னேறும் என்றும் அயத்துல்லாஹ் கொமெய்னி வலியுறுத்தினார்.

இந்தக் கருத்துக்கள், மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் பதற்றத்தின் பின்னணியில் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்