Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் மிக நீண்ட ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இந்தியாவின் மிக நீண்ட ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

9 தை 2026 வெள்ளி 18:34 | பார்வைகள் : 509


இந்தியாவின் மிக நீண்ட ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரை Simple அறிமுகம் செய்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த Simple Energy நிறுவனம், இந்தியாவில் இதுவரை நீளமான ரேஞ்ச் வழங்கும் “Simple Ultra” எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Simple Ultra-வில் 6.5 kWh திறன் கொண்ட பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

IDC சான்றளிக்கப்பட்ட 400 கி.மீ. ரேஞ்ச் - தினசரி பயணத்திற்கு பல நாட்கள் சார்ஜ் செய்ய தேவையில்லை.

2.77 விநாடிகளில் 0-40 கி.மீ. வேகத்தை எட்டக்கூடியது. இதன்மூலம் இந்தியாவில் இரண்டாவது வேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை பெறுகிறது.

Simple Ultra-வின் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கி.மீ. ஆகும்.

Simple Ultra இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் புதிய தரத்தை அமைத்துள்ளது.

Simple OneS மற்றும் Simple One மாடல்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

எடை 8 கிலோ குறைக்கப்பட்டு, 780 mm சீட் உயரம் கொடுக்கப்பட்டுள்ளது. 35 லிட்டர் சேமிப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

Traction control, cruise control, regenerative braking போன்ற புதிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

விலை: OneS - ரூ.1,49,999, One (standard) - ரூ.1,69,999, One (long range) - ரூ.1,77,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்