Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்கா சர்வதேச விதிகளிலிருந்து விலகுகிறது: மக்ரோன் குற்றச்சாட்டு!!

அமெரிக்கா சர்வதேச விதிகளிலிருந்து விலகுகிறது: மக்ரோன் குற்றச்சாட்டு!!

9 தை 2026 வெள்ளி 16:17 | பார்வைகள் : 1713


பரிஸில் நடைபெற்ற தூதர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி  எமானுவல் மக்ரோன், அமெரிக்கா சில பாரம்பரிய கூட்டாளிகளிடமிருந்து மெல்ல விலகி வருவதாகவும், சர்வதேச விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார். 

உலக அரசியலில் பன்முகத்தன்மை அமைப்புகள் பலவீனமடைந்து, பெரிய சக்திகள் உலகை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும் நிலை அதிகரித்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். வலிமையானவர்களின் சட்டம் மேலோங்க முயல்வதாகவும், பழைய சர்வதேச விதிகள் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் உலக நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்றும், அதிகரிக்கும் சீனாவின்  வணிக ஆக்கிரமிப்பு ஐரோப்பிய பொருளாதாரத்தை பாதிப்பதாகவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். 

பிரான்ஸ் புதிய காலனித்துவத்தையும் பேரரசுவாதத்தையும், அதேபோல் அடிமைத்தனமும் தோல்வியுணர்வும் கொண்ட அணுகுமுறைகளையும் மறுப்பதாக அவர் வலியுறுத்தி, வலுவான மற்றும் நம்பகமான கூட்டாளியாக உலகளவில் தனது செல்வாக்கை பாதுகாப்பதாக தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்