Paristamil Navigation Paristamil advert login

கொரெட்டி புயல்: RER மற்றும் Transilien போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு!!

கொரெட்டி புயல்: RER மற்றும் Transilien போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு!!

9 தை 2026 வெள்ளி 07:35 | பார்வைகள் : 2300


வியாழன் இரவிலிருந்து  வீசிய பலத்த காற்றால் இல்-து-பிரான்ஸ் பகுதியில் பொதுப் போக்குவரத்தை கடுமையாக பாதித்துள்ளது.

RER A ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் பாதையில் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அஷேர்–வில்லில் (Achères-Ville) பாதையில் மரம் விழுந்ததன் காரணமாக, செர்ஜி–லு-ஓ (Cergy–Le Haut) மற்றும் அஷேர் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. காலை 6.30 மணியளவில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால், மைசோன்-லஃபிட் (Maisons-Laffitte) பகுதியில் பாதையில் மரம் விழுந்ததால், காலை 6 மணி முதல் நான்தெர்ர்–நாந்த் பிரிஃபெக்சுர் (Nanterre-Préfecture) மற்றும் செர்ஜி–லு-ஓ / பொய்சி (Poissy) இடையே ரயில்கள் இயங்கவில்லை. சேவை காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RER E குறித்து வில்லியர்ஸ்-சூர்-மார்ன் (Villiers-sur-Marne) மற்றும் டூர்னான் (Tournan) இடையே காலை 10 மணி வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என SNCF தெரிவித்துள்ளது.

RER C வழித்தடத்தில், டூர்டான் (Dourdan) பகுதியில் பாதையில் மரம் விழுந்ததால், பிரெதினி (Brétigny) மற்றும் ஷாவில்-வேலிசி (Chaville-Vélizy) இடையே காலை 6.45 மணி வரை ரயில்கள் இயங்கவில்லை. தற்போது சேவை மீண்டும் தொடங்கியிருந்தாலும், அந்தப் பகுதியில் இன்னும் பாதிப்புகள் நீடிக்கின்றன.

மேலும், பொன்துவாஸ் (Pontoise) மற்றும் மொன்டினி-போஷாஞ் (Montigny-Beauchamps) இடையே காலை 8 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Transilien ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன!

P வழித்தடத்தில், பரிஸ் எஸ்ட் (Paris Est) மற்றும் ஷாத்தோ-தியெரி (Château-Thierry) இடையே இரு திசைகளிலும் காலை 10 மணி வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மோ (Meaux) மற்றும் லா பெர்தே-மிலோன் (La Ferté-Milon) இடையிலும் காலை 10 மணி வரை சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

L வழித்தடத்தில், மரம் விழுந்ததன் காரணமாக, நாந்த் யூனிவர்சிட்டே (Nanterre Université) மற்றும்  செர்ஜி-லு-ஓ (Cergy le Haut) இடையே காலை 8 மணி வரை சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

N வழித்தடத்தில், பிளைசிர்–கிரின்யோன் (Plaisir-Grignon) மற்றும் பரிஸ் மொன்பர்நாஸ் (Paris Montparnasse) இடையிலும், மோந்த்-லா-ஜோலி (Mantes-la-Jolie) மற்றும் பரிஸ் மொன்பர்நாஸ் இடையிலும் இரு திசைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

J வழித்தடத்தில், மைசோன்-லஃபிட் (Maisons-Laffitte) பகுதியில் மரம் விழுந்ததால், லே முரோ (Les Mureaux) மற்றும் பரிஸ் சாங்-லசார் (Paris Saint-Lazare) இடையே இரு திசைகளிலும் குறைந்தது காலை 8 மணி வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக, H வழித்தடத்தில், வால்மொந்துவாஸ் (Valmondois) வழியாகப் பெர்சான்–போமோன் (Persan-Beaumont) மற்றும் பரிஸ் கார் து நோர் (Paris Gare du Nord) இடையே காலை 8 மணி வரை எந்த ரயிலும் இயங்கவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்