Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸை தாக்கும் கோரெட்டி' புயல் ! மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் அபாயம்

பிரான்ஸை தாக்கும் கோரெட்டி' புயல் ! மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் அபாயம்

8 தை 2026 வியாழன் 19:10 | பார்வைகள் : 3852


பிரான்ஸின் வடமேற்கு பகுதியை இன்று முதல் நாளை வரையில் கடும் புயலான 'கோரெட்டி' (Tempête Goretti) தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் தீவிரத் தன்மையை அடிப்படையாக கொண்டு மான்ச் (Manche) மாகாணத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக 'Météo-France' அறிவித்துள்ளது. 

மான்ச் மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 150 முதல் 160 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும், உட்புற நிலப்பரப்புகளில் மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புயலின் உச்சக்கட்டம் வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி வரை மான்ச் பகுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அசாதாரணமான தீவிர நிலை காரணமாக மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் இடையூறுகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, மான்ச் மாகாண அதிகாரிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர்.

அதன்படி, வெள்ளிக்கிழமை முழுவதும் மான்ச் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

அத்துடன், வியாழக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

7.5 டன்களுக்கு மேல் எடை கொண்ட சரக்கு வாகனங்கள் (பால் சேகரிப்பு வாகனங்கள் தவிர) மாகாணச் வீதிகளில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் தடைக்கான அவசர விளக்குகள் மற்றும் குடிநீர் இருப்பு ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்குமாறும் மக்களை மான்ச் மாகாண ஆட்சியரகம் வலியுறுத்தியுள்ளது.
 

img_695fdb944c830.jpg


இதேவேளை மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று  பரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் புயலின் தாக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது .

இதன் காரணமாக இரவு ஒன்பது மணியின் பின்னர் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், அவசியமற்று வாகன பயணங்களை இடைநிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தொடர் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் ஜன்னல் ஓரங்களை அண்டியுள்ள பூச்சாடிகளை அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

கடும் காற்று காரணமாக அவை வீழ்ந்து வீட்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலமான காற்று காரணமாக வீட்டின் கூரைகள் கூட அடித்து செல்லும் நிலை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பரிஸ் வீதிகளில் மரங்கள் முறிந்து வீழும் அபாய நிலைமை உள்ளதால், அது குறித்து மிகவும் அவதானம் செலுத்துமாறு பரிஸ் வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்