Paristamil Navigation Paristamil advert login

விஜய்க்கு ஆதரவாக திரையுலகம்

விஜய்க்கு ஆதரவாக திரையுலகம்

8 தை 2026 வியாழன் 15:24 | பார்வைகள் : 473


விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் பிரசனை, கோர்ட் தீர்ப்பு காரணமாக பொங்கலுக்கு வரவில்லை. பட குழுவும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதுதொடர்பாக திரையுலகினர் ஒவ்வொருவராக கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

சிம்பு
அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் எப்போதும் உங்களைத் தடுத்ததில்லை. இதைவிட பெரும் புயல்களைத் தாண்டி வந்துவிட்டீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகன் வெளியாகும் அன்றே உண்மையான திருவிழா ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.

ரவி மோகன்
இதயம் நொறுங்கியது. விஜய் அண்ணா. உங்களின் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நானும் துணை நிற்கிறேன். உங்களுக்கு எந்த தேதியும் தேவையில்லை. நீங்கள்தான் தொடக்கம். தேதி எதுவாக இருந்தாலும், படம் வெளியாகும் நாள்தான் பொங்கல் என்கிறார்.

ஜெய்
எப்போதும் உங்களை தடுக்க தடைக்கற்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அதை உடைத்தெறிந்து வருவது உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல வழக்கமான ஒன்றே!!
எல்லோரும் போல் ரசிகனாக தம்பியாக ஜனநாயகன் வரும் நாளே பொங்கல் என காத்திருக்கிறேன் அண்ணா.

சனம் ஷெட்டி
அநியாயத்தின் உச்ச கட்டம். நீங்க பண்ணுங்க. அப்படி பண்ண பண்ணத்தான் அவங்க உயர்ந்துட்டு போவாங்க. ஏன்னா அவங்களை நாங்க கைவிட்ற மாட்டோம். பொங்கல் அன்னைக்கு படம் வரலைன்னா என்ன, படம் வர அன்னைக்கு தான் நமக்கு பொங்கல். நீங்க பண்ண விஷயத்தால சினிமா வரலாற்றில், யாருமே மறக்க முடியாத எதிர்பார்க்காத சம்பவம் நாங்க பண்ணிக்காட்டுவோம்.

சாந்தனு
ஜனநாயகன் வெளியீட்டில் நடப்பதை பார்த்து மனம் உடைந்தது. எதுவாக இருந்தாலும் சரி, எல்லா ரசிகர்களும் பார்வையாளர்களும் #ஜனநாயகன் குழுவினருக்கு ஆதரவாக நிற்பார்கள். விஜய் அண்ணா, ஒரு சகோதரனாக நான் உங்களுடன் நிற்பேன், ஒரு பார்வையாளராக "நாங்கள்" அணிக்காகவும் ரசிகர்கள் அணிக்காகவும் நிற்போம். ஜனநாயகன் வெளியீட்டில் தான் பொங்கல் தொடங்கும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்