Paristamil Navigation Paristamil advert login

நாட்டின் நிலை குறித்து நம்பிக்கையின்மை!!

நாட்டின் நிலை குறித்து நம்பிக்கையின்மை!!

8 தை 2026 வியாழன் 15:11 | பார்வைகள் : 1920


புதிய ஆண்டை முன்னிட்டு  CSA – CNEWS / JDD / Europe 1 நடாத்திய கருத்துக்கணிப்பில், பிரான்ஸ் நாட்டின் எதிர்காலம் குறித்து 77% மக்கள் நம்பிக்கையின்மையுடன் (pessimistes) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், ஆண்கள், அனைத்து வயது பிரிவினரும், அனைத்து சமூக-தொழில் பிரிவினரும் இந்த கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

dns_sondage_barbares-taille640_6824917e34795.jpg

50 முதல் 64 வயதுக்குள் உள்ளவர்களில் 84% பேர் நம்பிக்கையின்மையுடன் உள்ளனர். 35 வயதிற்குக் குறைவானவர்களில் 63% பேர் அதே மனநிலையிலேயே உள்ளனர். 18 முதல் 24 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டும் 50% நம்பிக்கை, 50% நம்பிக்கையின்மை என சமநிலையில் உள்ளனர்.

நாட்டின் நிலை குறித்து கவலைப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து 53% மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். குறிப்பாக 18–24 வயதினரில் 67% பேர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஏன் இந்த தேசிய அளவிலான நம்பிக்கையின்மை?

பிரான்ஸ் பல ஆண்டுகளாகவே சர்வதேச கருத்துக்கணிப்புகளில் மிகவும் நம்பிக்கையின்மை உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது.

அரசியல் நிலைமை,

பொருளாதார அழுத்தம், குறிப்பாக விவசாயத் துறை நெருக்கடி,

உலகத் தலைவர்களின் விரிவாக்க நோக்கங்கள்,

போன்ற இந்த காரணங்களால், பிரெஞ்சு மக்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக கவலைப்படுகின்றனர்

வர்த்தக‌ விளம்பரங்கள்