பொங்கலுக்கு கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் திரைக்கு வருகிறதா?
8 தை 2026 வியாழன் 13:24 | பார்வைகள் : 374
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் 'வா வாத்தியார்'. கார்த்தியின் 26வது படமான இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளார் கார்த்தி.
கடந்த டிசம்பர் 12ம் தேதியே இப்படம் வெளியாவதாக இருந்தது. 2014ம் ஆண்டில் பைனான்சியர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பரை திவாலானவர் என அறிவித்து அவரது சொத்துக்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் சொத்தாட்சியர் நியமிக்கப்பட்டார். அவரிடமிருந்து வா வாத்தியார் படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கடனாகப் பெற்ற 10 கோடியே 35 லட்ச ரூபாய் வட்டியுடன் சேர்ந்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
கடந்த வருடம் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வெளிவந்த 'தங்கலான், கங்குவா' ஆகிய பட வெளியீட்டின் போதும் அந்த பாக்கி கடன் தொகை வழக்கால் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் நீதிமன்ற உத்தரவுப்படி கொஞ்சம் பணம் செலுத்தி படத்தை வெளியிட்டார்கள். தற்போது 'வா வாத்தியார்' படம் வெளியாகும் அறிவிப்பு வந்ததால், சொத்தாட்சியர் சார்பில் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடன் தொகையைத் தர வேண்டும் அதுவரை படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கில் முழு பணத்தையும் செலுத்திவிட்டு படத்தை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டதால் திட்டமிட்டபடி 'வா வாத்தியார்' திரைக்கு வரவில்லை.
இந்த நிலையில் தற்போது சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள விஜயின் 'ஜனநாயகன்' படம் நாளை வெளியாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அடுத்தவாரம் பொங்கல் வெளியீட்டிற்கு வரவில்லை என்றால் வா வாத்தியார் படத்தை பொங்கலுக்கு வெளியிட அப்படக்குழு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கோர்ட் சொன்னபடி பணத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்திவிட்டால் அல்லது அதில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி கோர்ட்டில் அனுமதி பெற்றால் வா வாத்தியார் படம் வெளியாக வாய்ப்புள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan