Paristamil Navigation Paristamil advert login

கொரெட்டி புயல்: 27 மாவட்டங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கையில்!!

கொரெட்டி புயல்: 27 மாவட்டங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கையில்!!

8 தை 2026 வியாழன் 08:03 | பார்வைகள் : 2076


கொரெட்டி புயல் (la tempête Goretti) இன்று மாலையிலிருந்து பிரான்சின் வடமேற்கு பகுதிகளை தாக்கவுள்ளது என்று Météo France அறிவித்துள்ளது. 

la Manche பிராந்தியம் வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 3 மணி வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், la Bretagne, la Normandie, l’Île-de-France, les Hauts-de-France உள்ளிட்ட பல பகுதிகள் பலத்த காற்றுக்கான செம்மஞ்சள் எச்சரிக்கையில் உள்ளன. 

மொத்தமாக 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இந்த புயலால் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் போது கடுமையான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றன. லா மாஞ்ச் பிராந்திய  கரையோரங்களில் மணிக்கு 160 கி.மீ. வரையும், ஏனைய பகுதிகளில் 140 கி.மீ. வரையும் காற்று வீசக்கூடும். 

ஏனைய செம்மஞ்சள் எச்சரிக்கையிலுள்ள பிராந்தியங்களில் மணிக்கு 100–120 கி.மீ வரையும், கடற்கரையில் 130–140 கி.மீ. வரையும்  காற்று வீசக் கூடும். பரிஸ் பகுதியில் கூட மணிக்கு 90–100 கி.மீ. வரை  காற்று பல மணி நேரங்கள் வீசுக்கூடும் என Météo France எச்சரிக்கை விடுத்துள்ளது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்