Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்

ரஷ்யாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்

7 தை 2026 புதன் 17:20 | பார்வைகள் : 772


ரஷ்ய பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைந்த 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், போரின் முன்கள வரிசையில் அமைந்துள்ள பல்வேறு பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 106 உக்ரைனிய ஆளில்லா விமானங்கள்(UAVs) ரஷ்ய வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உக்ரைனிய நிலப்பரப்பில் இருந்து ஏவப்பட்ட அமெரிக்காவின் தயாரிப்பான ஹைமார்ஸ்(HIMARS) ஏவுகணையையும் ரஷ்யா சுட்டு வீழ்த்தி இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இரு தரப்புக்கும் இடையிலான மோதலில், உக்ரைனிய ராணுவத்தில் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான தரவுகள் படி, சுமார் 270 க்கும் மேற்பட்ட உக்ரைனிய வீரர்கள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பீரங்கி, ஒரு கவச ஆம்புலன்ஸ் வாகனம், 4 கவச போர் வாகனம், மற்றும் 13 இதர வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உக்ரைனின் Buk-M1 ரக விமான எதிர்ப்பு ஏவுகணை தளமும் இந்த மோதலில் அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்