Paristamil Navigation Paristamil advert login

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்ஸ்! அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரான்

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்ஸ்! அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரான்

7 தை 2026 புதன் 14:35 | பார்வைகள் : 137


நிக்கோலஸ் பூரான், ஒரே ஓவரில் 5 சிக்ஸர்ஸ் விளாசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் SA20 தொடரின் நேற்றைய போட்டியில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்(JSK) மற்றும் MI கேப் டவுன்(MICT) அணிகள் மோதியது.

மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், நாணய சுழற்சியில் வென்ற MI கேப் டவுன் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி,முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, 69 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி 12 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது.

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்க பட்ட 12 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக, அணித்தலைவர் பேஃப் டு பிளெசிஸ், 44 ஓட்டங்கள் குவித்தார்.

124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய MI கேப் டவுன் அணி, 11.2 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் குவித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக, ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 35 ஓட்டங்களும், நிக்கோலஸ் பூரான் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதில், ரிச்சர்ட் க்ளீசன் வீசிய ஒரு ஓவரில், 5 சிக்ஸர்களை விளாசி நிக்கோலஸ் பூரான் அதிரடி காட்டினார்.

போட்டி நாயகன் விருது நிக்கோலஸ் பூரானுக்கு வழங்கப்பட்டது.

இதன் மூலம், 2025-26 SA20 தொடரில் MI கேப் டவுன் அணி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்