Paristamil Navigation Paristamil advert login

இலங்கை - சிங்கப்பூருக்கு இடையில் கூடுதல் விமான சேவை

 இலங்கை - சிங்கப்பூருக்கு இடையில் கூடுதல் விமான சேவை

6 தை 2026 செவ்வாய் 19:49 | பார்வைகள் : 271


 இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது. 

இந்தத் தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் வசந்த குடலியனகே தெரிவித்துள்ளார். 

அதற்கமைய சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய பிற்பகல் சேவை இயக்கப்படவுள்ளது. 

இதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர்பஸ் A350-900 விமானத்தை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. 

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் இந்த சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்