Paristamil Navigation Paristamil advert login

2027ஆம் ஆண்டிலும் பிரதமராக நான்தான் இருப்பேன் - ஸ்டார்மர் உறுதி

2027ஆம் ஆண்டிலும் பிரதமராக நான்தான் இருப்பேன் - ஸ்டார்மர் உறுதி

6 தை 2026 செவ்வாய் 06:57 | பார்வைகள் : 465


2027ஆம் ஆண்டிலும் பிரித்தானியாவின் பிரதமராக நான்தான் இருப்பேன் என பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பிபிசி தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர், முந்தைய ஆட்சியின்போது, கன்சர்வேட்டிவ் கட்சியினர் தங்கள் அமைச்சர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்வதும் மாற்றுவதுமாக இருந்தார்கள்.

நாங்களும் அதேபோல் செய்தால், அது எதிர்க்கட்சிகளுக்கு பரிசு கொடுத்ததுபோலாகிவிடும்.

ஆக, லேபர் கட்சியைப் பொருத்தவரை, 2027ஆம் ஆண்டிலும் பிரித்தானியாவின் பிரதமராக நான்தான் நீடிப்பேன்.

2024ஆம் ஆண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமராக நீடிப்பதற்காக நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த கடமையை நான் நிறைவேற்றியே தீருவேன்.

மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும், அடுத்த தேர்தல் வரும்போது, ஏற்கனவே நான் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை நான் நிறைவேற்றிவிட்டேனா என்பதுதான் மக்களுக்கு முக்கியம் என்று கூறியுள்ளார் ஸ்டார்மர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்