Paristamil Navigation Paristamil advert login

வறுமையில் அல்லாடும் வெனிசுலா - இந்தியாவின் ரூ.10,000 எவ்வளவு?

வறுமையில் அல்லாடும் வெனிசுலா - இந்தியாவின் ரூ.10,000 எவ்வளவு?

6 தை 2026 செவ்வாய் 05:57 | பார்வைகள் : 935


வெனிசுலா நாணயமான பொலிவர் (Venezuelan bolívar), கடந்த பத்தாண்டுகளில் உலகின் வேகமாக சரிந்து வரும் நாணயங்களில் ஒன்று.

பணவீக்கம், மோசமான பொருளாதார மேலாண்மை மற்றும் நீண்டகால அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் அன்றாடத் தேவைகளை வாங்குவதற்குக் கூட அதிக அளவு பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது.

எனவே பலர் டாலர் உட்பட வெளிநாட்டு நாணயங்களைச் சார்ந்து இருக்கிறார்கள். அங்கு 1 இந்திய ரூபாய் சுமார் 3.38 வெனிசுலா பொலிவர் மதிப்புடையது. அதன்படி, 10,000 இந்திய ரூபாய் வெனிசுலாவில் சுமார் 33,850 பொலிவர்களுக்குச் சமம்.

இந்தக் கணக்கீட்டிலிருந்து வெனிசுலா நாணயம் இந்திய ரூபாயை விட மிகவும் பலவீனமானது என்பது தெரிகிறது. இதில் குறிப்பாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு இங்குதான்.

இருப்பினும், வெனிசுலாவின் கச்சா எண்ணெய் கனமாகவும் அடர்த்தியாகவும் இருப்பதால், பிரித்தெடுத்து சுத்திகரிக்க அதிக செலவு ஆகும். காலாவதியான தொழில்நுட்பம், போதுமான முதலீடு இல்லாதது மற்றும் சர்வதேச தடைகள் காரணமாக,

எண்ணெயிலிருந்து எதிர்பார்க்கப்படும் வருவாய் ஈட்டப்படவில்லை. இதன் விளைவாக, எண்ணெய் இருப்பு இருந்தபோதிலும், நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்