Paristamil Navigation Paristamil advert login

Zomato நிறுவனரின் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த Temple

Zomato நிறுவனரின் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த Temple

6 தை 2026 செவ்வாய் 05:57 | பார்வைகள் : 187


Zomato நிறுவனரின் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த Temple சாதனம் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வின் நிறுவனர் மற்றும் CEO தீபிந்தர் கோயல்(Deepinder Goyal) ஆவார்.

சமீபத்தில் ராஜ் சாமானியுடன் பேசிய பாட்காஸ்ட்டில், தீபிந்தர் கோயலின் கண்ணுக்கு அருகே சிறிய அளவில், உலோக நிறத்தில் அணிந்திருந்த சாதனம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தீபிந்தர் கோயலின் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த சாதனமானது Temple என அழைக்கப்படுகிறது.

இது மூளையின் இரத்த ஓட்டத்தை தொடர்ந்து மற்றும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சோதனையில் உள்ள அணியக்கூடிய சாதனம் ஆகும்.

டெம்பிள், zomatoவின் கீழ் வராது எனவும், இது தனது தனியார் நிதியுதவி பெற்ற ஆராய்ச்சி முயற்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்திற்காக தீபிந்தர் கோயல் இதுவரை 25 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்த சாதனம் தற்போது சோதனையில் தான் உள்ளது, மக்களின் பயன்பாட்டிற்கு இன்னும் தயாராகவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் மருத்துவர்கள் இந்த சாதனம் பயனற்றது என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் தத்தா, "தமனி விறைப்பு மற்றும் துடிப்பு அலை வேகம் குறித்த இந்தியாவின் ஆரம்பகால ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக கூறுகிறேன்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்