Paristamil Navigation Paristamil advert login

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் பயிற்சியாளர் ரூபன் அமோரிம் நீக்கம்

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் பயிற்சியாளர் ரூபன் அமோரிம் நீக்கம்

6 தை 2026 செவ்வாய் 05:57 | பார்வைகள் : 145


ரூபன் அமோரிம் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரூபன் அமொரிம் இன்று நீக்கப்பட்டுள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் அணி 6வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இந்த மாற்றம் அவசியமானது என்று அணியின் தலைமை முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்காக ரூபன் அமோரிம் ஆற்றிய பங்களிப்பை அந்த அணியின் நிர்வாகம் வெகுவாக பாராட்டியுள்ளது.

அத்துடன் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி நிர்வாகம் வாழ்த்தியுள்ளது.

2024ம் ஆண்டு ரூபன் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு மே மாதம் பில்பாவோவில் நடைபெற்ற UEFA யூரோப்பா லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை இறுதிப்போட்டிக்கு வழி நடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்