Paristamil Navigation Paristamil advert login

அரிசி உற்பத்தியில் சீனாவை விஞ்சியது இந்தியா: மத்திய அமைச்சர் சவுகான் பெருமிதம்

அரிசி உற்பத்தியில் சீனாவை விஞ்சியது இந்தியா: மத்திய அமைச்சர் சவுகான் பெருமிதம்

6 தை 2026 செவ்வாய் 11:45 | பார்வைகள் : 901


அரிசி உற்பத்தியில், சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகிலேயே மிகப்பெரிய நாடாக நம் நாடு உருவெடுத்துள்ளது,” என, மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் பங்கேற்ற பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சிவ்ராஜ் சிங் சவுகான், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட 25 பயிர்களின் 184 மேம்படுத்தப்பட்ட விதை ரகங்களை அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அதிக மகசூல் தரும் விதைகளை உருவாக்குவதில் நம் நாடு பெரும் வெற்றி கண்டுள்ளது. அந்த வகையில், இந்த புதிய விதை ரகங்கள் பயிர் உற் பத்தியை அதிகரிப்பதோடு விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்தும்.

கடந்த 1969 - 2014 வரை, 3,969 ரகங்கள் அறிமுகமான நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு ஆட்சியில் மட்டும், 3,236 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. உணவு பற்றாக்குறை நாடாக இருந்த இந்தியா, இன்று உலகிற்கே உணவளிக்கும் நாடாக மாறியுள்ளது.

அரிசி உற்பத்தியில் சீனாவை நம் நாடு முந்தியுள்ளது. நாட்டின் நெல் உற்பத்தி, 15 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சீனாவின் உற்பத்தி, 14 கோடி டன்னாக உள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத சாதனை.

நம் நாடு தற்போது சர்வதேச சந்தைகளுக்கு அரிசி வினியோகம் செய்கிறது. நாட்டில் போதுமான அளவு உணவு தானிய கையிருப்பு உள்ளதால், நாட்டின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களிலும் தன்னிறைவு அடைவதற்கு ஏதுவாக, அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதில் வேளாண் விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்