தமன்னா புதிய சாதனை!
5 தை 2026 திங்கள் 14:47 | பார்வைகள் : 347
இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகை தமன்னா தற்போது செய்திகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கோவாவில் நடத்தப்பட்ட பிரமாண்ட நிகழ்ச்சியில் அவர் நிகழ்த்திய நடனம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதனிடையே, வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே நடனமாடியதற்கு அவருக்கு ரூ.6 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கோவாவின் பிரபலமான லாஸ் ஓலாஸ் பீச் க்ளப் (பாகா பீச்) இடத்தில் டிசம்பர் 31, 2025 அன்று நடைபெற்ற புத்தாண்டு பார்ட்டியில் தமன்னா உடன் பஞ்சாபி நட்சத்திரம் சோனம் பஜ்வாவும் நடனமாடினார். “ஆஜ் கி ராத்” போன்ற தனது ஹிட் பாடல்களுக்கு தமன்னா ஆடிய நடன வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களை கவர்ந்தன. இந்த நிகழ்ச்சியில் மிலிந்த் கபா உள்ளிட்ட பாடகர்களும் பங்கேற்று கொண்டாட்டத்தை மேலும் சிறப்பித்தனர்.
இந்த நடன நிகழ்ச்சிக்கு தமன்னாவுக்கு ரூ.6 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன. இதன்மூலம், நிமிடத்துக்கு ரூ.1 கோடி என்ற கணக்கில் அவர் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், தமன்னாவின் தற்போதைய டிமாண்டை இது பிரதிபலிப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமன்னா கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு பாடல்கள் மூலம் பெரும் புகழ் பெற்றுள்ளார். “காவாலா” (ஜெயிலர்), “ஆஜ் கி ராத்” (ஸ்ட்ரீ 2), “நஷா” (ரெய்டு 2), “ஜோகே” (கே.ஜி.எஃப்) போன்ற பாடல்கள் பில்லியன் கணக்கில் வியூஸ் பெற்று வைரலானவை. இவை அவரை ஐட்டம் சாங் குயின் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளன.
கடைசியாக தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்த தமன்னா, தற்போது இந்தி திரைப்படங்களில் பிஸியாக உள்ளார். அவரது கைவசம் மூன்று இந்தி படங்கள் உள்ளதாகவும், இன்னும் பல சிறப்பு பாடல் ஆஃபர்கள் வரிசையில் உள்ளதாகவும் தெரிகிறது.
தமன்னாவின் இந்த புத்தாண்டு நடனம் மற்றும் சம்பள செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “நடனத்துக்காக மட்டுமே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம்” என்ற பெயரை அவர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan