Paristamil Navigation Paristamil advert login

போலிக் கூட்டணி அமைத்துள்ள திமுக: நயினார் நாகேந்திரன்

போலிக் கூட்டணி அமைத்துள்ள திமுக: நயினார் நாகேந்திரன்

5 தை 2026 திங்கள் 08:54 | பார்வைகள் : 143


உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக திமுக போலிக் கூட்டணி வைத்துள்ளது,'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

மாற்றம்

புதுக்கோட்டையில் நடந்த பிரசார நிறைவு விழாவில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் வேண்டிக் கொள்கின்றனர். இந்தியாவின் இரும்பு மனிதர். 2ம் சர்தார் வல்லபாய் படேல் அமித்ஷாஇதனை மாற்ற யாராவது வரமாட்டார்களா என வேண்டினர். அந்த நேரத்தில் அமித்ஷா வந்துள்ளார்.தேஜ கூட்டணி மூலம் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் செய்யப்போகிறார்

வீட்டில் இருக்கவும் வெளியே செல்லவும் பயம். அதற்கு போதைப்பொருள் மயம் காரணம்.இந்த பயணம் ஒரு துவக்கம் தான். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.இது இறுதி யாத்திரை கிடையாது. இனிமேல் தான் துவங்கப்போகிறது. இந்த ஆட்சி அகற்றப்படும் வரை 3 மாதங்கள் அல்லும் அயராது பாடுபடுவோம்.

ஆட்சி மாற்றம்


இந்த ஆட்சியில் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் நடமாட முடியவில்லை. கொல்லை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. பெண்களை அவதூறாக பேசுகின்றனர்.ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கரூர் சம்பவத்துக்கு காரணமானவர்கள் நீதிமன்றம் ஏறுவார்கள். கள்ளச்சாராயம் காரணமாக கள்ளச்குறிச்சியில் 60 பேரும, விழுப்புரத்தில் 17 பேரும் இறந்த போனார்கள்.

ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக , உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக போலியாக கூட்டணி வைத்துள்ளார்.அமித்ஷா அமைத்த கூட்டணி ஆட்சி மாற்றத்துக்கான கூட்டணி. ஆட்சிமாற்றம் வந்தே தீரும்.

போலி மதசார்பின்மை


திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரையில் பூர்ணசந்திரன் தீக்குளித்து கொண்டதற்கு, திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் தான் காரணம். நாங்கள் அனைவரையம், அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். மதசார்பின்மையை கடைபிடிக்கும் ஒரு கட்சி பாஜ தான்.ஆனால், திமுக போலி மதசார்பின்மையை கடைபிடிக்கின்றீர்கள். என்றைக்கும் திமுக மக்கள் சக்தியோடு ஆட்சியை பிடித்தது கிடையாது. 2021 ல் நாம் ஒன்றாக இருந்துஇருந்தால், திமுக ஆட்சிக்கு வந்து இருக்காது.

திமுக என்றைக்காவது வெற்றி பெறும் கட்சி.திருவனந்தபுரத்தில் வீசிய காற்று தான் தமிழகத்திலும் வீசப்போகிறது. அதற்கு அச்சாரமாக அமித்ஷா வந்துள்ளார். மேற்கு வங்கத்திலும், அசாமிலும் அதே காற்று வீசப்போகிறது.உங்களை வீட்டுக்கு விரட்டி, தேஜ கூட்டணி ஆட்சியை அமித்ஷா கொண்டு வர முடியும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்