Paristamil Navigation Paristamil advert login

சுற்றுலாப் பயணிகளுடன் ஆபத்தான துரத்தல்: போலி டாக்சி ஓட்டுநர் கைது!!

சுற்றுலாப் பயணிகளுடன் ஆபத்தான துரத்தல்: போலி டாக்சி ஓட்டுநர் கைது!!

4 தை 2026 ஞாயிறு 14:34 | பார்வைகள் : 1908


டிஸ்னிலாந்து பரிஸில் இருந்து ஒரு பெருவிய குடும்பத்தை ஏற்றிச் சென்ற 38 வயது நபர், சனிக்கிழமை இரவு சிவப்பு விளக்கை மீறியதையடுத்து காவல்துறையினரால் துரத்தப்பட்டார். 

இரவு 11 மணியளவில் Chessy-Marne-la-Vallée புகையிரத நிலையம் அருகே டாக்சி ஓட்டுநராக நடித்த அவர், Ford S-Max காரில் நான்கு பெரியவர்கள் மற்றும் 3 வயது குழந்தையை வால்-து-மார்னில் உள்ள தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்ல முனைந்தார். ஆனால் காவல்துறையினரின் கண் முன்னே விதிமீறல் செய்த பின், குடும்பத்தினரின் அலறல்களையும் பொருட்படுத்தாமல், காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

காவல்துறையினரின் துரத்தலின் போது அவர் மணிக்கு  150 கிலோமீட்டர் வேகத்தில் ஆபத்தான முறையில் ஓட்டி, இறுதியில் A4 நெடுஞ்சாலையை நோக்கிச் செல்லும் சாலையில் நடுவண் தடுப்பில் மோதிக் கொண்டு நின்றது. கடும் பயத்தில் இருந்த குடும்பத்தினர் உடனடியாக காரிலிருந்து வெளியேறினர். விபத்து ஏற்படாமல் இருக்க தூரத்தில் இருந்த காவல்துறையினர், ஓட்டுநர் மீண்டும் காரை இயக்குவதற்கு முன்பே வந்து தடுத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அந்த நபர் இவ்வளவு அபாயங்களை எடுத்ததற்குக் காரணம், அவர் ஏற்கனவே சட்டவிரோத ஓட்டுநராக போலீஸாருக்கு அறிமுகமானவர் என்பதே. போலீஸ் உத்தரவை மீறுதல், பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல், மற்றும் VTC ஓட்டுநர் தொழிலை சட்டவிரோதமாக செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; சுற்றுலாப் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்