Paristamil Navigation Paristamil advert login

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ்

 வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ்

4 தை 2026 ஞாயிறு 07:34 | பார்வைகள் : 911


அமெரிக்கா திடீரென 3.1.2026 நேற்றைய தினம் வெனிசுலா மீது தீவிர தாக்குதலை நடத்தியது.

நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் ஒரே இரவில் கைது செய்த பின்னர், திடீரென வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் பதிவியேற்றுள்ளார்.

வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் கடந்த சில நிமிடங்களாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் உரையாடி வருகிறார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டெல்சி ரோட்ரிக்ஸ், "வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி மதுரோ தான். நாட்டைப் பாதுகாக்க வெனிசுலா தயாராக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். ஷஷ

வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்குப் பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு ஜனாதிபதி மதுரோவே மூளையாகச் செயல்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்