வெனிசுலாவிற்கு செல்வதை தவிருங்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்
4 தை 2026 ஞாயிறு 09:18 | பார்வைகள் : 791
வெனிசுலாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்காவுக்கு போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்க படையினர் நேற்று அதிகாலை தாக்குதலை தொடங்கினர். மேலும், அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
ஒட்டுமொத்த நாடும் இப்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது.
மதுரோவை சிறை பிடித்த படத்தை சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்து ஏற்றிச் சென்ற விமானம் நியூயார்க்கில் தரையிறங்கியது. இந்நிலையில் வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெனிசுலாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அங்கு தேவையில்லாமல் வெளியில் செல்லாதீர்கள். cons.caracas@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புக்கொள்ளலாம்.
அவசர தொலைபேசி எண் +58-412-9584288-ஐ தொடர்புகொள்ளலாம். கராகஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். தூதரக அதிகாரிகள் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார்கள். இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan