Paristamil Navigation Paristamil advert login

முடிவுக்கு வந்தது டென்மார்க்கின் தபால் சேவை பாரம்பரியம்!

முடிவுக்கு வந்தது டென்மார்க்கின் தபால் சேவை பாரம்பரியம்!

3 தை 2026 சனி 06:24 | பார்வைகள் : 118


டென்மார்க்கில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த தபால் சேவை பாரம்பரியம் அந்நாட்டுத் தபால் நிர்வாகத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டென்மார்க்கில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டிசம்பர் 30 ஆம் திகதியுடன் கடிதங்களை விநியோகிப்பதை நிறுத்தவும், நாடு முழுவதும் உள்ள 1,500 சிவப்பு நிறத் தபால் பெட்டிகளை அகற்றவும் அந்நாட்டுத் தபால் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மக்கள் தற்போது தகவல்தொடர்பு மற்றும் ஆவணப் பரிமாற்றங்களுக்கு இணையவழி முறைகளை அதிகம் பயன்படுத்துவதால், பாரம்பரிய தபால் சேவையின் பயன்பாடு குறைந்துள்ளதே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்